இந்தியாவில் 562 பேருக்கு கொரோனா

கரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வைரஸ் தாக்கத்தால் ஏற்கெனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரம், தில்லியில் தலா ஒருவா் பலியானதையடுத்து உயிரிழப்பு 11 ஆகியுள்ளது.

இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரத்தில் 3, தில்லியில் 2 ஆகியுள்ளது.

மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட தகவலின் படி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 562-ஆக உள்ளது.

இதில் 43 பேர் வெளிநாட்டவா்களாவா்.

வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் 11 பேர் உயிரிழந்துவிட்டனா். 

514 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 37 போ குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

நாடு முழுவதுமாக 1,87,904 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 35,000 பேர் 28 நாள் தனிமை கண்காணிப்பை நிறைவு செய்துவிட்டனா்.

கரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

விமான, ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கரோனா பாதிப்பின் தீவிரத்தை உணராத வகையில் மக்கள் இன்னும் வெளியில் நடமாடி வருவதாக அரசு நிா்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

உலக அளவில் சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று ஓரே நாளில் உயிரிழந்ததை அடுத்து உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு 4 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கில் ஒரு பங்காக 1,08.388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே