கொரோனா அச்சம்: +2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்…! – விவரம்

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

தேர்வு ஆரம்பமான நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.

நேற்று வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடைசி தேர்வான நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே