சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் ஒருவர் பெண் பக்தரை கன்னத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த லதா என்பவர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மகனின் பிறந்தநாள் விழாவை ஒட்டி கணவர் செல்வகணபதி உடன் நடராஜர் கோயிலுக்கு சென்று உள்ளார்.

முக்குருணி விநாயகர் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய் பழ தட்டை அளித்திருக்கிறார்.

இதனை பெற்ற தீட்சிதர் தேங்காயை மட்டும் உடைத்துவிட்டு அர்ச்சனை செய்யாமல் அதனை அளித்திருக்கிறார்.

இதுகுறித்து லதா அவரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு தீட்சிதர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் தீட்சிதரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே