திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதித் தமிழர் பேரவையின் அதியமான் கூறியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபோன்று, திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ஒரு தொகுதியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தமும், தற்போது கையெழுத்தாகியுள்ளது.
பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.