சிவகங்கை,தேனி மற்றும் தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணி துவங்குவதில் தாமதம்

பல இடங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்க தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் தொடங்கி இருக்கக் கூடிய சூழ்நிலையில் சில இடங்களில் இன்னும் தொடங்காமல் தாமதமாகி இருக்கிறது என்ற தகவல் வந்திருக்கிறது.

சிவகங்கை ஆர்.டி.எம். கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் இன்னும் தொடங்காமல் தாமதம் ஆகி இருக்கிறது.

தூத்துக்குடியில் ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தாமதமாகி இருக்கிறது.

தேனியில் கம்பம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கிறது.

அதேபோன்று தேனியில் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி தாமதமாகி இருக்கிறது.

தேனியில், அலுவலர்களை பணி அமர்த்துவதில் குளறுபடி ஏற்பட்டதால் இந்த வாக்கு எண்ணிக்கை பணி தொடங்காமல் இருப்பதாக முதற்கட்ட காரணமாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே