ஒரு மாத கால பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 8-ம் தேதி பேரறிவாளனுக்கு தமிழக சிறைத்துறை அனுமதி வழங்கிய நிலையில், 12-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்றுடன் பரோல் காலம் முடிவடையும் நிலையில், தந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக கூறி மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு பரோலை நீட்டித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.