தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வர ஏதுவாக திங்கட்கிழமையும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தீபாவளி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்தன.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணையை நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை விட தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபர் 28-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 9-ம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.