ஓ.பன்னீர்செல்வத்தை சிகாகோ தமிழ் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ தமிழ் சங்கம் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

தமிழகத்திற்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது, தொழில் முதலீடுகளை திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றார்.

சிகாகோ நகரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்கும் அவர் சிகாகோ தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து நாளை நடத்தப்படும் குலோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் 2019 விழாவில் பங்கேற்று இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் 2019 ஆசிய விருதை பெற்றுக் கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே