சென்னையில் தொடர்ந்து 6-வது நாளாக காற்று மாசு

சென்னையில் தொடர்ந்து 6-வது நாளாக காற்று மாசுபாடு நிலவுகிறது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கில் இருந்து காற்று வீசுவதால் அங்கு உள்ள மாசுகள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்து உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை முழுவதும் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ்நேர கண்காணிப்பு மையங்களில் சுவாசிக்க தகுந்த அளவான 100 புள்ளிகள் என்பதை விட அதிகமான காற்று மாசு பதிவாகி உள்ளது.

அதாவது இன்று காலை நிலவரப்படி காற்று தரக்குறியீடு ஆனது மணலியில் – 209, கொடுங்கையூரில் – 307, ராமாபுரத்தில் – 276, ஆலந்தூரில் – 156, வேளச்சேரியில் – 152, கோவிளம்பாக்கத்தில் – 139 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே