ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக SDPI கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதாகவும், இது மிக முக்கியமான ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த தீர்ப்பை இஸ்லாமியர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், நீதித் துறை மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் தெஹலான் பாகவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.