நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கியது.
பிரித் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் துவக்க ஜோடியாக களமிறங்கினர்.
2 பவுண்டரிகள் விளாசி 16 ரன்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் பிரித் வி ஷா அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து வந்த புஜாராவும் 11 ரன்களில் அவுட் ஆனார்.
மிகவும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேப்டன் கோலி வெறும் 2 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி உள்ளூர் மதிய உணவு இடைவேளை வரை 18 ஓவர்கள் முடிவில் 79 ரன்கள் எடுத்திருந்தது.
மயங்க் அகர்வால் 34 ரன்களுக்கும், விஹாரி 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ரஹானே 34 ரன்களுடனும், ரிஷப் பந்த் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.