தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

தமிழகத்தில் எஞ்சியுள்ள ஊரக பகுதிகளுக்கான தேர்தலுடன் சேர்த்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கும் வகையில் திமுக சார்பில்  இணைப்பு மனு அளித்துள்ளது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளுக்கு கடந்த காலங்களில் ஒரே நேரத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள திமுக, தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படும்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்  என அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே