“இந்தியன்-2” படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து : லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, அப்படத்தை தயாரித்துவரும் லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டை ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றபோது கிரேன் விழுந்து உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் தலைமறைவான கிரேன் ஆப்பரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், படத்தை தயாரித்துவரும் லைக்கா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்சன் மேனேஜர் உட்பட 4 தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே