பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் : செல்லூர் ராஜூ

பாஸ்ட் புட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக வேண்டும் என இன்றைய கால கட்ட நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரையில் அமமுக நிர்வாகிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் இருந்து உணர்ச்சி மிகுதியால் அமமுகவிற்கு சென்றவர்கள், மீண்டும் தாய் கட்சிக்கு வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் உழைத்து வருவதால், தலைமை செயலகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை என பெருமிதம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரைப்படங்களில் நடிக்கும் போது முதல்வராக ஆசைப்படவில்லை என்பதை குறிப்பிட்ட அவர், இன்றைய நடிகர்களின் முதல்வர் கனவு குறித்து கடுமையாக சாடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே