குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுகவின் கொள்கை முடிவு : அமைச்சர் பாண்டியராஜன்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுகவின் கொள்கை முடிவு எனவும் யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும் இலங்கை அகதிகள் விவகாரத்தில் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும்; அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே