பரதேசியான என்னை ஓட ஓட விரட்டுவதாக சாமியார் நித்தியானந்தா வேதனை தெரிவித்துள்ளார்.
குஜராத் போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா, ஈகுவடார் அருகேயுள்ள தீவை விலைக்கு வாங்கி தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று வழக்கம் போல் யூடியூபில் சத்சங்கம் செய்த நித்தியானந்தா, தன்னை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
தன்னை பரதேசி என்று கூறிக்கொண்ட சாமியார் நித்தியானந்தா, தன்னை துரத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை, பெங்களூரு, மதுரை என விடாமல் துரத்தி அடித்தால் எங்குதான் செல்வது என்று சாமியார் நித்யானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தன்னை பற்றி முழுமையாக தெரிய வேண்டும் என்றால் திருவண்ணாமலை சென்று கேட்டுப்பாருங்கள் என்று சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார்.