ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ  திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என 21நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 26ம் தேதி தொடங்கிய பகல்பத்தின் கடைசி நாளான இன்று நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் வாசனைமிக்க ஏலக்காய் ஜடை தரித்து காட்சியளித்தார்.

மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளி பல்லாக்கில் உலா வந்து, ஆழ்வார்கள் மத்தியில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே