பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!

2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி என ஐந்து நாட்கள் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

மருத்துவத்திற்கும், இயற்பியலுக்கும் தலா மூன்று பேர் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் பெற்றுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக உலக உணவுத்திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பால் ஆர்.மில்க் ரோம், ராபர்ட் பி. வில்சன் ஆகிய இருவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலக் கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏலக் கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே