IranvsUSA : அமெரிக்க விமான தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்..

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விமானநிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

3வது உலக போர் ஏற்படுதற்கான ஆரம்பமாக இது பார்க்கப்பட்டது.

சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழிக்குப் பழி இருக்கும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இது உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக அறிவித்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சூழலில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்வது ஈரான் ராணுவத்துக்கு கோபம் ஏற்படுத்தியது.

ஆனால் ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுக்க எந்நேரமும் எதுவும் நடக்கும் என்ற நிலை உருவானது.

இந்நிலையில் அல் அசாத் பகுதியில் 2  அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் அந்த படைத்தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

இது சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என்று ஈரான் அறிவித்துள்ளது.

தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது.

ஈரான் தாக்குதலில் ஏற்பட்ட சேதம், பலி எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் தாக்குதல் அதிரடியானது, என்பதால் இதற்கு நிச்சயம் அமெரிக்கா பதில் தாக்குதலை கொடுத்த தயாராக இருக்கும் என்பதால் 3வது உலகப்போர் தொடங்கிவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே