காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குஷ்பு காங்.,இருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை டெல்லிக்கு சென்றார்.

ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை காங்கிரஸ் நீக்கம் செய்த தகவலை வெளியிட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நடிகை குஷ்பு காங்.,இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பி என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்தித்து நடிகை குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே