உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்க்கப்படுமென்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மே 4-ம் தேதி உள்நாட்டு சேவையும், ஜூன் 1-ம் தேதி முதல் வெளிநாடு விமானசேவை தொடங்கும் என்றும் தொடங்குமென்றும் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து எந்தவிதமான விமான சேவையை தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்று விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும் மத்திய அரசின் ஊரடங்கு தொர்பான அடுத்த அறிவிப்பு வந்த பின்னர் முன்பதிவை தொடங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளனர்.