கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் – மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்

கொரோனவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர் திலிப் கோஷ் மாட்டு கோமியம் குடித்தால் குணமாகும் என பேசியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் திலீப் கோஷ்,

“மக்கள் கொரோனா வைரசால் அவதிப்படுகிறார்கள் . ஒரு கழுதைக்கு பசுவின் மதிப்பு புரியாது . இது இந்தியா, பகவான் கிருஷ்ணரின் நிலம், இங்கே மாடுகள் கடவுள் நாங்கள் பசுவை வணங்குகிறோம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு பசு கோமியம் இருக்கும்.

“ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொள்ளுங்கள், கவலைப்பட வேண்டாம்” மது உட்கொள்பவர்கள், ஒரு பசுவின் மதிப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் ? என கூறினார்.

உலகளவில் ஒட்டுமொத்தமாக 1.38 கோடி பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 5.89 லட்சம் பேர் பலியாகியுள்ளார். இந்தியாவில் முழுவதும் 10.38 லட்சம் பேர்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 34,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 671 பேர் இறந்துள்ளார்.

பாஜக தலைவர் திலிப் கோஷ் பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது. பல கோடி கணக்கில் மருந்துகளை கண்டுபிடிக்க முதலீடு செய்து ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் இப்படி பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே