லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்

லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.

இந்த நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

சீன ராணுவ செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை சட்டவிரோதமாக கடந்த இந்திய ராணுவம், பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சீன ராணுவ செய்தி தொடர்பாளரின் தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே