டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்ததை அடுத்து, பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
இதையடுத்து, இன்று தமிழக அரசு தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
மேலும் ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் இது தமிழக அரசின் கொள்கை நீதியானது என தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்திம் உத்தர்வுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
இந்நிலையில் இன்று உச்ச நீதினன்றம், பொதுமுடக்க காலத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதின்ற உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரும்
என்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.