நிர்பயா வழக்கு : குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து வினய் ஷர்மா தரப்பில் அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

மேலும், நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பாக மத்திய அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அஷோக் பூஷண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு வாதாட அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டனர்.

பவன் குப்தா மட்டுமே இதுவரை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவில்லை.

எனவே, அவருக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கும் வகையில், வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார்.

எனவே, அவர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யவும்; அது நிராகரிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை எதிர்த்து கருணை மனுத்தாக்கல் செய்யவும் நாளை வரை கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே