சென்னையை சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பூக்கடை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நாகராஜனிடம் பயிற்சிக்காக சென்ற போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் பேரில் நாகராஜன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பின் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகராஜனை ஜூன் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை போக்சோ நீதிமன்றம் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.