#COVID19 : இந்தியாவில் 24 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 6.53 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,29,638லிருந்து 23,96,637 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,999 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,033 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16,95,982 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் தற்போது வரை கொரோனாவால் பாதித்த 6,53,622 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 70.77% ஆக உயர்ந்துள்ள  நிலையில், இறப்பு விகிதம் 1.96% ஆக குறைந்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 27.27% ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,313 ஆகவும், தமிழகத்தில் 3,14,520 ஆகவும், டெல்லியில் 1,48,504 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே