வங்கதேச விடுதலைக்காக தனது இளம் வயதில் போராடி சிறை சென்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்கசேதத்தின் 50வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தலைநகர் டாக்கா சென்றார்.

வங்கதேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில், அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமருடன் அவர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வங்க தேச விடுதலைக்காக, இந்தியாவில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் தனது 20வது வயதில் பங்கேற்று சிறை சென்றதாக குறிப்பிட்டார்.

வங்கசே விடுதலைக்காக 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வங்கதேசத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தையும், துணிச்சலையும் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே