5வயது தம்பியை 4 மாதங்களாக சித்ரவதை செய்து கொன்ற அக்கா..!!

ஐந்து வயது தம்பியை நான்கு மாதங்களாக சித்திரவதை செய்து அடித்து உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்படுத்தி சித்திரவதை செய்து கொன்ற அக்காவின் செயல் அதிர வைக்கிறது. சென்னை பீர்க்கன்கரணை நகரில் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூரை சேர்ந்தவர்கள் தியாகராஜன் – சூசைமேரி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் இருந்தனர். தியாகராஜன் சூசைமேரி இருவருமே தினமும் கூலி வேலைக்கு சென்று விடுவதால் ஐந்து வயது மகனை அவர்களால் கவனித்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது.

இதனால் பீர்க்கன்காரணை வேல் நகரிலிருந்த சகோதரியின் வீட்டில் விட்டு மகனை கொன்று கவனிக்கச் சொல்லி இருக்கிறார்.

கடந்த நான்கு மாதங்கள் சிறுவன் அங்கே தங்கி இருந்த நிலையில், சூசை மேரியின் சகோதரியும் சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார்.

அதன்பின்னர் அவரது மகள் மேரி(20) மட்டும் சிறுவன் கவனித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் சிறுவன் மயக்கம் அடைந்து விட்டதாகவும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுவதாகவும் பெற்றோர்களுக்கு தெரிவித்திருக்கிறார் மேரி.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுவனின் உடலில் தீக்காயங்கள் உடல் முழுவதும் பிரம்பால் அடித்த காயங்களும் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணை நடத்தியதில் அந்த நான்கு மாதங்களாக அந்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்ததும் இதுபற்றி வெளியே சொன்னால் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு விடுவேன் என்று மிரட்டியதால் அவனும் யாரிடமும் சொல்லாமல் இருந்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.

கடந்த 16ம் தேதி அன்று இரவு 8 மணிக்கு எப்போதும்போல் சிறுவனை அடித்து தாக்கிய போது மயங்கி விழுந்தவன் அதன் பின்னர் அவன் எழுந்திருக்கவே இல்லை.

அதனால்தான் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றேன் என்று சொன்ன மேரியிடம் சித்திரவதை செய்ய வேண்டும் என்று போலீசார் கேட்டதற்கு அவன் குறும்புத்தனம் அதிகமாக செய்து வந்தான். அதனால் தான் அப்படி செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

தற்போது அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு விட்டாலும் கூட சிறுவனை இந்த அளவுக்கு சித்திரவதை செய்து கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே