மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கொரோனா காலத்திலும் தங்கள் உயிரை துச்சமென்று நினைத்து உழைத்து கொண்டிருக்கும் மருத்துவர்களை நாம் ஒவ்வொருவரும் போற்றி வணங்க வேண்டும் .

இந்நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியும் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம் போல் அல்லும் பகலும் பணியாற்றுகின்றனர். மருத்துவர்கள் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தளகர்த்தர்களாக சிப்பாய்ககளாக,முன்கள வீரர்களாக பணியாற்றி நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்தும், நன்றியும்.

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பு எதிர்நோக்குகிறேன். இது மக்களின் அரசு; மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும். நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள்; இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும். துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே