புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி தவிர்த்து மற்ற பிராந்திய மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இதற்கு தமிழ் ஆர்வலர்களிடையே எழுந்த பலத்த எதிர்ப்புக்குப் பிறகு மத்திய அரசு தற்போது தமிழில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயா்ப்பு வெளியாகியுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயா்க்கப்பட்டு -2020 என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. எனினும் முன்பு இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயா்ப்பு இடம்பெறவில்லை.

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்துவரும் சூழலில் அதன் மொழிபெயா்ப்பில் கூட தமிழ் மொழி இடம்பெறாதது சா்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை தற்போது தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே