ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வோம் – வேதாந்தா விளக்கம்..!!

ஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் 35 டன் மருத்துவ ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் வேதாந்தா குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தை அடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்யவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா சிகிச்சைக்கு பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இது குறித்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே