கொரோனா பரவல் காரணமாக யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைப்பு..!!

உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC NET தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மே 2 முதல் 17 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவிருந்த யுஜிசி நெட்(UGC NET) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் 3-ம் முறையாக இந்த தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்தி வைத்துள்ளது.

மே 2 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்) வழங்குவதற்கும் யு.ஜி.சி சார்பாக யுஜிசி நெட் தேர்வை நடத்தப்படுகிறது.

யுஜிசி நெட் தேர்வு மே 17 வரை நடத்த திட்டமிடப்பட்டது.

இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே