ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உரிமைகோர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடைபெற்ற இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி முன்னிலை பெற்றது.

ஹரியானாவில் தொகுதி சட்டப்பேரவை அமைந்து விடுமோ என்ற கருத்து நிலவி கொண்டிருந்த நிலையில், அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அங்கு பாரதிய ஜனதா 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்று இருக்கிறது.

கட்சிகள் அடிப்படையில் பார்த்தால் அதிக எண்ணிக்கைகளை பாரதிய ஜனதா பெற்றிருந்தாலும், பிற கட்சிகளை கூட்டு சேர்த்து காங்கிரஸ் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையும் அங்கே தெரிந்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆளுநர் சத்தியநாராயணனைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே