கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேர்வு தேவைதானா? – மு.க.ஸ்டாலின் கேள்வி..!!

கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனா பரவல் சாதித்து, உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்வதால், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா? என எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே