தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து விற்ற 82 நிறுவனங்களிடம் விசாரணை..!!

தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து விற்பனை செய்து வந்த 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்கம் விசாரணை.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து, சந்தைகளில் விற்பனை செய்து வந்த 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்கம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. 

மேலும், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்ககம் சார்பில் முதற்கட்டமாக 32 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே