கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய அதிமுக..!!

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நிதியை இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகளவில் பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காகவும், தொற்று ஏற்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காகவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து அதிமுக சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும், மருத்துவ வசதிகளுக்காகவும் அண்ணா திராவிட முன்னேற கழகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்பொழுது திமுக தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே