நீட் தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கம்..!!

நாடு முழுவதும் பரபரப்பான சூழலுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது.

சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14.37 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

கொரோனாவால் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்காக கடந்த 14ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டது.

nta.ac.in, ntaneet.nic.in ஆகிய இணையத் தள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவித்துவருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே