கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

எம்பி கவுதம் சிகாமணி திமுகவின் மூத்த நிர்வாகியான பொன்முடியின் மகன் ஆவார்.

ரிசர்வ் விதிகளை மீறி முதலீடு செய்த புகாரில் கவுதம சிகாமணி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது, அமலாக்கத்துறை.

2008ம் ஆண்டு, கவுதம் சிகாமணி, ரூ.41,57,225 மதிப்புள்ள முதலீடுகளை வெளிநாட்டில் மேற்கொண்டு 2,45,000 பங்குகளை, ஜகார்த்தாவின், பிடி எக்செல் மெகின்டோ நிறுவனத்திடம் வாங்கியுள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தின் யுனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ் நிறுவனத்தில் ரூ.2286924 மதிப்புள்ள பங்குகளை பெற்றுள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறவில்லை.

இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே