தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வுரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா..? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும்,கொரோனா குறைந்த பிறகு தேர்வு நடத்தலாமா..? அல்லது தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர்த்து கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை மட்டும் தேர் நடத்தலாமா..? அல்லது தேர்வு நேரத்தை குறைத்து தேர்வு நடத்தலாமா போன்ற அவை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே