மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,842 தேர்வு மையங்களில் இன்று (13/09/2020) நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை 1,17,990 பேர் எழுதவுள்ளனர்.

மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வுக்கு காலை 11.00 மணிக்கே தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் இருக்க வேண்டும்.

ஒரு அறைக்கு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றினால் பின்பற்றப்படும் சமூக விலகல் விதிகள் காரணமாக 24-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அனுமதிச் சீட்டில், கொரோனா நடைமுறைகளைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு அறைக்குள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 11 மணி முதல் 11.30 மணிவரை, மாறுபட்ட ஸ்லாட் நேரப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில், 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 1.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதில், ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிகிறது.

முந்தைய ஆண்டுகளில் ஒரு தேர்வறையில், 24 மாணவ – மாணவியர் தேர்வெழுத அனுமதி வழங்கப் பட்டிருந்தது

தேர்வு மையத்துக்கு வரும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசரால் துடைத்த பின், தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

தேர்வு மையத்துக்குள் செல்லும் போது, மாணவ – மாணவியரின் உடல் வெப்பநிலை, தானியங்கி கருவியால் பரிசோதிக்கப்படும்.

சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ள மாணவ – மாணவி யரை, தனி அறையில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே