நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரயில் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும்.
இருப்பினும் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அதாவது நீங்கள் செல்ல வேண்டிய ரயில் குறித்த நேரத்தை தாண்டி தாமதமாக வந்ததால் உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்த உணவானது ஐஆர்சிடிசி இல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இப்படி ரயில் பயணிகளுடைய நலனை கருத்தில் கொண்டு ஐஆர்சிடிசி பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரயிலில் பயணத்தின் போது, நவராத்திரி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக வெங்காயம், பூண்டு இல்லாமல் சிறப்பு சாப்பாடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 400 ரயில் நிலையங்களில் இந்த வசதியை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. நவராத்திரி முடியும் வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.