இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில், நாடு முழுவதும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் தலைவர் ருபி கஸ்னி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரதமர் மோடி முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தார்.

அது மட்டுமல்ல, பெண்களுக்காக இலவச வீடு, கேஸ் இணைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இதனால், பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார். இதனால்தான் பிரதமர் மோடியை உலகமே பாராட்டி வருகிறது.

அப்படிபட்ட நல்ல மனிதரை நாம் பாராட்ட வேண்டாமா. அதனால்தான், மோடிக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

எங்கள் சேமிப்பு பணத்தை பயன்படுத்தி மோடிக்கு கோயில் கட்ட உள்ளோம். இதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடி என்று யாரும் முத்திரை குத்த வேண்டாம் என்பதையும் உலகுக்குத் தெரிவிக்க, மோடிக்கு கோயில் கட்டுகிறோம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே