நாங்களும் பதிலுக்கு பெயர் வைப்போம் – அமைச்சர் காமராஜ் பதிலடி..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிரச்சாரத்தின் போது, தமிழக அரசுக்கு எதிராக மு.க ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்து வருகிறார்.

இதனிடையே, அதிமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடத்திருப்பதாக குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி ஆளுநரிடம் நேரில் மனு அளித்திருந்தார்.

அந்த புகாரை பொய் என்றுக் கூறிய அமைச்சர் வேலுமணிக்கு மு.க ஸ்டாலின், ‘குற்றச்சாட்டை நிரூபிக்க நான் தயார்! நிரூபித்து விட்டால் பதவி விலக நீங்கள் தயாரா?’ என்று சவால் விட்டிருந்தார்.

அதோடு, புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர்களுக்கு ஊழல் நாயகன் என்பதைப் போன்று பெயரும் வைத்திருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் காமராஜ், ‘தமிழக அமைச்சர்களுக்கு பெயர் வைத்து வருவதை மு.க ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.

எங்களுக்கும் பெயர் வைக்க தெரியும். நாங்களும் பதிலுக்கு பெயர் வைப்போம்’ என்று பதிலடி கொடுத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே