தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தமிழிசை – நாராயணசாமி விமர்சனம்..!!

புதுச்சேரி முதல்வராக ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் சமீபத்தில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை அங்கு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வராக ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தாமரை மலரும் என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தமிழிசை; தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார்

யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அவர் அறிவித்தது ஏற்புடையதல்ல’ என்று விமர்சித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே