காட்டுமன்னார் கோவிலில் முருகுமாறன் வெற்றி செல்லும்: திருமாவளவன் மனு தள்ளுபடி

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த விசாரணையின் போது வாக்கு எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஆஜரான தொகுதி தேர்தல் அதிகாரி, சிலவற்றில் ஓட்டுச் சீட்டும், பெரும்பாலானவற்றில் சான்றொப்பமும் இல்லை என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி முருகுமாறன் வெற்றி செல்லும் என உத்தரவிட்டு திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே