செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது

  • தினமும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும்,
  • தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்,
  • சாட்சிகளையோ, ஆவணங்களையோ கலைக்கக் கூடாது,
  • பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே