ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஓய்வு பெற்ற 4 அதிகாரிகளை விசாரிக்க எதிர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரிகள் 4 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக பிரதமர் மோடிக்கு ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்ததது.

முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டும் நிலையில், அதிகாரிகள் யாரும் விசாரிக்காமல் அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை மட்டும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என அவருடைய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டன.

இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடைபெற்றபோது நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் 4 பேரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.

ஓய்வு பெற்ற அந்த நான்கு அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு உயர் அதிகாரிகள் 71 பேர், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குறிப்பிட்ட அந்த நான்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக குறி வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே