விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணால் பாண்டியா..!!

ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர் கிருனாள் பாண்டியாவிடம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த அணியில் கிருனாள் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் பாண்டியாவை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.

அப்போது பாண்டியாவிடம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மூன்றும் தங்கமும் இருந்திருக்கின்றன.

அவற்றின் மதிப்பு ஒரு கோடிக்கும் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பாண்டியாவை அழைத்து விசாரணை செய்தார்கள்.

விசாரணையின் முடிவில் பொருள்களுக்கான வரி, அபராதம் போன்றவற்றை பாண்டியா செலுத்த நேரிடும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுங்கத்துறையினர் முடிவு செய்வார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே