முத்தையா முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் “800” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், நடிகர் விஜய் சேதுபதி.

இவர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து வெளியிட்டார்கள்.

இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம், ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே